வியாழன், 5 அக்டோபர், 2023
சமூக அமைப்பு
குடும்ப அமைப்பை காப்பாற்ற தான் பெண் வளர்க்கப்படுகிறாள். பெண்களுக்கு இதில் எந்த வசதியும் இல்லை. சுயம் அழிந்த பெண்களுக்கு தான் இந்த அமைப்பில் இடம் இருக்கிறது. சுய மரியாதையுடன் எங்கள் விருப்பப்படி தான் நாங்கள் வாழப் போகிறோம். இந்த சமூகம் மாறவில்லை, பெண்களை அவர்கள் வாழ்வை அவர்களே தீர்மானித்த வண்ணம் வாழ விடவில்லை எனில் குடும்பம் என்ற அமைப்பை உடைப்போம்.
நிறையே குறை
உன்னோடிருந்த பொழுதுகளில்
உன்னுடன் உடன்பட்டு மகிழ்ந்தாலும்
அன்றி முரண்பட்டு தகித்தாலும்
என்னோடு எனக்கொரு பிணக்குமில்லை.
இப்போதோ நீயின்றி என்னோடு என்னால் தனித்திருக்க இயலாதபடி
என்னோடு எனக்கு தீராத பிணக்கு.
மற்றபடி நீயில்லா குறையொன்றுமில்லை எனக்கு.
உன்னுடன் உடன்பட்டு மகிழ்ந்தாலும்
அன்றி முரண்பட்டு தகித்தாலும்
என்னோடு எனக்கொரு பிணக்குமில்லை.
இப்போதோ நீயின்றி என்னோடு என்னால் தனித்திருக்க இயலாதபடி
என்னோடு எனக்கு தீராத பிணக்கு.
மற்றபடி நீயில்லா குறையொன்றுமில்லை எனக்கு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)