வியாழன், 5 அக்டோபர், 2023

You do, why me

சமூக அமைப்பு

குடும்ப அமைப்பை காப்பாற்ற தான் பெண் வளர்க்கப்படுகிறாள். பெண்களுக்கு இதில் எந்த வசதியும் இல்லை. சுயம் அழிந்த பெண்களுக்கு தான் இந்த அமைப்பில் இடம் இருக்கிறது. சுய மரியாதையுடன் எங்கள் விருப்பப்படி தான் நாங்கள் வாழப் போகிறோம். இந்த சமூகம் மாறவில்லை, பெண்களை அவர்கள் வாழ்வை அவர்களே  தீர்மானித்த வண்ணம் வாழ விடவில்லை எனில் குடும்பம் என்ற அமைப்பை உடைப்போம்.

நிறையே குறை

உன்னோடிருந்த பொழுதுகளில்
உன்னுடன் உடன்பட்டு மகிழ்ந்தாலும்
அன்றி முரண்பட்டு தகித்தாலும்
என்னோடு எனக்கொரு பிணக்குமில்லை.
இப்போதோ நீயின்றி என்னோடு என்னால் தனித்திருக்க இயலாதபடி
என்னோடு எனக்கு தீராத பிணக்கு.
மற்றபடி நீயில்லா குறையொன்றுமில்லை எனக்கு.

வியாழன், 9 ஏப்ரல், 2015

மொழி

என் மொழி என் முகவரி
தாயில்லாதவரை என்ன
 சொல்லி  அழைக்க
காசு கிடைக்கும் ...
பிழைப்பு கொடுக்கும் ..
கௌரவமாய் இருக்கும்.,
தாயைத் தவிர்த்து  வசதியான
தாதி பின் போன கதையாய்
தமிழ் அறியாமல் வேற்று
மொழியறிவு பெற்றென்ன
தமிழ் வழி கல்வி ஓர் கனவு
இரண்டாம் மூன்றாம்
மொழியாக கூட தமிழறியா
தற்குறிகள் வாழப்போவது
வளமான வெளிநாடு          
விடியல் காணாதவர்
விடிவெள்ளிஅறிவாரோ  
தாய்மொழி  கோலிவுட் மொழி?!

வெள்ளி, 4 அக்டோபர், 2013

என் செய்வேன்

புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வேனோ
புறமுதுகிட்டு அல்லது புதுமெருகிட்டு
புயல் போல வெளி கிளம்பி கொண்டவர்க்கு
சேதம் விளைவித்து வேறு வழியற்று
வேகம் தணிந்து தென்றலாய்  திரும்பி
புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வேனோ
வேறு இடமில்லை சென்றடைவதற்கு
சிறகு முளைத்து சிகரம் தொட விழையும்
என் குஞ்சுகள் கூடடைவதற்கு
என் அறம் தணிந்து 

புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வேனோ

செவ்வாய், 11 ஜூன், 2013

தனிப்பயன்

நான் கணவனால்  கைவிடப்பட்டவள்!!
நான் பேசுவதே அவருக்கு பிடித்தமானதாயில்லை பேசாமல்  எனக்கியலாது
மனதில் தோன்றுவது எல்லாம் வெளிப்படுத்துவது
ஈருடல் ஓருயிர் கணவன் மனைவியிடையே நடைபெறவில்லை
என் மக்களுக்காக  என்று அவர் கண்முன்னால் நடமாடுகிறேன்
என் வாயடைக்க அவர் கத்தியதைப்போல் கெட் லாஸ்ட் ஆகியிர்ருப்பேன்
தொழில் முனையும் பெண்ணும்
பெரிய இலக்கை தொட இலக்கின்றி அலையும் மகவும்
என்னை இங்கு இருத்தி இருப்பன 
அவரின் பெரிய மனதில் எனக்கிடமில்லை.. 

வெள்ளி, 12 அக்டோபர், 2012

நான்...

நான் இப்போதெல்லாம் தாலி அணிவதில்லை.
இதென்ன இன்றைய செய்தியா? 
கல்யாண வயதில் மகள் 
பள்ளியிறுதி வகுப்பில் மகன் 
திரும்ப முடியாத திருப்பு முனை 
நின்று முறுவலிக்க நேரமில்லை 
உழைத்து அலுத்து வந்தாலும் 
தேவையறிந்து வரம் அருளும
பரமாத்மா என் கணவன் 
ஆனாலும் நான் தாலி அணியவேயில்லை 
அதற்கென்ன?!

என் சுற்றத்தில் 
புருவம் உயர்த்தும்,
பலரும் கூடி பலதும் பேசும் 
பயந்து என்னை பயமுறுத்தி 
என்னவரின் ஆயுசு 
என்னுயிர் மக்களின் எதிர்காலம்
என் தாலியில் கட்டப்பட்டு  கிடப்பதை   
அறிவுறுத்தி அணியச்செய்ய துடிக்கும் 
ஒரு செய்தி 
ஆகையால்  நான் தாலி அணியவேயில்லை